வால்பாறை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலை - சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் ஆய்வு

ஊசிமலை எஸ்டேட் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று காலை இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுஆய்வு மேற்கொண்டார்.


கோவை: ஊசிமலை எஸ்டேட் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீர் அமைக்க விரைவாக சட்டமன்றத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் சாலை அமைத்து பத்து வருடத்துக்கு மேலாக உள்ளது.



சாலை தற்போது குண்டும் குழியுமாக படிக்கட்டு போல் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிகம் சிரமப்படுகின்றனர்.

ஊசிமலை எஸ்டேட் பகுதியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவு சோலைப்பாடி மட்டம் என்ற இடம் வரை சுமார் 5 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பள்ளி, மருத்துவமனை போன்ற அத்தியாவிசியமான தேவைகளுக்கு அரசு பேருந்தையும் தனியார் வாகனங்களில் பயன்படுத்துகின்றனர்.



தற்போது சாலை குண்டு குழியுமாக பல ஆண்டுகளாக உள்ளதால் வாகனங்கள் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

மேலும் இரவு நேரங்களில் அவசர மருத்துவ தேவைக்கு 108 வாகனம் கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று காலை ஊசிமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குண்டும் குழியுமாக உள்ள சாலையை ஆய்வு செய்ய மேற்கொண்டார் இதில் சுமார் பத்து கிலோமீட்டர் வரை சாலை குண்டு குளியுமாக உள்ளது.



அதை இரண்டு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஊசிமலை எஸ்டேட் மக்களிடம் பேசுகையில் சாலையை அரசுக்கு ஒப்படைக்கவில்லை என்றும் சட்டமன்ற உறுப்பினரை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்.



ஆனால் இதுவரை சாலை கூட போட்டு தர முடியவில்லை என்று பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர். இந்த சாலை சீர் அமைக்க விரைவாக சட்டமன்றத்தில் பேசி தமிழக அரசு சாலையை அமைத்து தர கோரிக்கை விடுவதாகவும் மக்களிடம் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...