தமிழ்நாடு வேளாண்‌ பல்கலையில்‌ புரதத்தின்‌ செயல்‌ திறனை கண்டறிவதற்கான நேரடி அனுபவ பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் "புரதத்தின்‌ செயல்திறனை கண்டறிவதற்கான புதுமையான தீர்வுகள்:‌ MALDI-TOF-MS” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள்‌ நேரடி அனுபவ பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


கோவை: புரதத்தின்‌ செயல்‌ திறனை கண்டறிவதற்கான நேரடி அனுபவ பயிற்சி வகுப்பில்‌ பல்வேறு கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து மாணவர்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ பங்கேற்று பயனடைந்தனர்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக உயிர்‌ தொழில்நுட்ப சிறப்பு மையத்தில்‌ “புரதத்தின்‌ செயல்திறனை கண்டறிவதற்கான புதுமையான தீர்வுகள்‌: MALDI-TOF-MS” என்ற தலைப்பில்‌ அக்டோபர்‌ 16 மற்றும்‌ 17, 2023 ஆகிய இரண்டு நாட்களில்‌ நேரடி அனுபவ பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில்‌ பல்வேறு கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து மாணவர்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ பங்கேற்று பயனடைந்தனர்‌.



இந்நிகழ்ச்சியின்‌ துவக்கவிழாவில்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக தாவர மூலக்கூறு மற்றும்‌ உயிர்‌ தகவலியல்‌ துறைத்‌ தலைவர்‌ முனைவர்‌ எ.ஜான்‌ ஜோயல்‌ வரவேற்புரையாற்றினார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக தாவர மூலக்கூறு மற்றும்‌ உயிர்‌ தொழில்நுட்ப மைய இயக்குநர் முனைவர்‌ ந.செந்தில்‌ தனது துவக்கவுரையில்‌ புரதத்‌ தொகுதிகளை ஆய்வு செய்வதற்கான பல்வேறு தொழில்நுட்பங்கள்‌ மற்றும்‌ வசதிகளை அனைத்து மாணவர்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ உபயோகப்படுத்துவதற்கான சாத்தியக்‌ கூறுகளைப்‌ பற்றி எடுத்துரைத்தார்‌. மேலும்‌, உயிர்‌ தொழில்நுட்ப சிறப்பு மையத்தில்‌ உள்ள புரோடடியோமிக்ஸ்‌ மற்றும்‌ மெட்டபோலோமிக்ஸ்‌ ஆய்வக வசதியை பல்வேறு வேளாண்‌ நிறுவனங்கள்‌, தொழில்‌ முனைவோர்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌ என்றும்‌ கூறினார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக விதை மைய இயக்குநர்‌ முனைவர்‌ ஆர்‌.உமாராணி அவர்கள்‌ தனது முதன்மையுரையில்‌ பயிர்‌ மேம்பாட்டில்‌ மரபியல்‌ மற்றும்‌ மரபணு வரிசை முறை ஆய்வின்‌ முக்கியத்துவத்தைப்‌ பற்றி விளக்கினார்‌. மேலும்‌, புரோட்டியோமிக்ஸின்‌ மேம்பட்ட கருவிகளைப்‌ பயன்படுத்தி விதை மற்றும்‌ தானியங்களில்‌ உள்ள புரத உயிரி குறிப்பான்‌ (BIOMARKER) அடையாளம்‌ காண்பதன்‌ மூலம்‌ புரத வேறுபாட்டை மதிப்பிடலாம்‌ என்றும்‌ கூறினார்‌.

இறுதியாக, பேராசிரியர்‌ முனைவர்‌ சு.மோகன்குமார்‌ அவர்கள்‌ நன்றியுரையாற்றினார்‌. அதனைத்‌ தொடர்ந்து ஸ்பின்கோபயோடெக்‌ நிறுவனத்தின்‌ தொழில்நுட்ப வல்லுநர்கள்‌ து.வெங்கடேஷ்‌, பி.சுரவணன்‌ ஆகியோர்‌ மால்டிடாஃப்‌ ஆய்விற்கான மாதிரிகளை தயார்படுத்துவதற்கான நெறிமுறைகள்‌ மற்றும்‌ மென்பொருள்‌ செயல்பாடுகளைப்‌ பற்றி விளக்கினர்‌. மேலும்‌ மால்டிடா.'.ப்‌ இயந்திரத்தில்‌ மாதிரிகளை உட்செலுத்தும்‌ செயல்முறை விளக்கம்‌ பயிற்சி பெறுவோர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளின்‌ முடிவுகளை எவ்வாறு மதிப்பிடுவது என்பதனையும்‌ விளக்கிக்‌ கூறினார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...