கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம் - அமைச்சர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற ரத்ததான முகாமில் அமைச்சர்கள் பங்கேற்பு.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. மடத்துக்குளம் சூர்யா மஹாலில் நடந்தது.



ரத்ததான முகாமிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அமைத்து தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஈஸ்வர சாமி வரவேற்று பேசினார்.

மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் நாகராஜ் செல்வி சேதுபால் நடராஜன் செல்லப்பன் விஜயகுமார் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்ததான முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பி சாமிநாதன் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் துவக்கி வைத்தார்.



இதில் ஒன்றிய குழு தலைவர் காவிய ஐயப்பன், மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி, உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோர் ரத்ததானம் அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...