மடத்துக்குளம் அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் - சீறி பாயந்த காளைகள்

மடத்துக்குளம் அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.



மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி இணைந்து மாட்டு வண்டி பந்தயம் எனப்படும் ரேக்ளா பந்தயத்தினை திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



பொள்ளாச்சி தாராபுரம் ஒட்டன்சத்திரம் திருப்பூர் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.



குறிப்பிட்ட இலக்கை குறுகிய நேரத்தில் சென்றடையும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயங்களும் கோப்பைகளும் பரிசாக வழங்கபட்டது.

இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.ஏ.சாகுல் அமீது, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் நா.பாலசெந்தில், கு.சாமிதுரை மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் த.கௌதம்ராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...