உடுமலை அருகே மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நிவாரணம் வழங்கினர்.


திருப்பூர்: மேற்கூரை இடிந்த விபத்தில் உயிரிழந்த மூவருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத் துக்குளம் வட்டம், கொழுமத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான முரளி ராஜா, கௌதம், மணிகண்டன் ஆகிய 3 பேரின் குடும் பத்தினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி பலியானவர்களின் குடும் பத்தினரை நேரில் சந்தித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதி திராவிடர் நலத்துறைஅமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங் கினர். இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...