வால்பாறையில் மின்கம்பத்தில் மோதிய கல்லூரி பேருந்து - சிறு காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார்

கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை சாலையில் தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில், உயர் அழுத்த மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கல்லூரி பேருந்து மோதிய மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்த விபத்தால், வால்பாறை நகரமே இருளில் மூழ்கியது.



கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை சாலையில் தனியார் கல்லூரி பேருந்து உயர் அழுத்த மின் கம்பத்தில் மேல் மோதியதில் கம்பம் முறிந்து சாலையில் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பேருந்தில் வந்த கல்லூரி மாணவர்கள் முன் கூட்டியே இறங்கியதால் பதிப்பு இல்லை. பேருந்து ஓட்டுனர் சிறிய காயத்துடன் தப்பினார். இந்த விபத்தின் காரணமாக இந்த வழியில் செல்ல கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து செல்ல முடியாமல் உள்ள நிலை ஏற்பட்டு உள்ளது.



இதன் காரணமாக நடுமலை, பச்சமலை, கருமலை, அக்காமலை, போன்ற எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி குழந்தைகள் நடந்து சென்று எதிரே வரும் வாகனத்தில் செல்கின்றனர்.



மின் கம்பதை அகற்றி போக்குவரத்தை சரி செய்வதற்கு காவல் துறையின் மின் துறையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...