பெரியநாயக்கன்பாளையத்தில் திருடு போன 105 பவுன் மீட்பு - நகைகளை திருடிய தந்தையும், மகனும் கைது

கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப் பகுதியில் திருட்டு போன 105 பவுன் தங்க நகைகளை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு தந்தை, மகன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: போட்டோகிராபி தொழில் செய்வதற்காக நகைகளை திருடிய தந்தையையும், மகனையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப் பகுதியில் திருட்டு போன 105 பவுன் தங்க நகைகளை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு தந்தை, மகன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு வீடுகளில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் உள்ள மின்வாரிய பொறியாளர் சுரேந்திரன் வீட்டில் 72 பவுன் நகைகள் திருடுபோயின. இது குறித்து வழக்கு பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பெரியநாயக்கன்பாளையம் சரக டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையில் ஆய்வாளர் தாமோதரன் உள்ளிட்ட தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நகை திருட்டு சம்பவங்கள் ஈடுபட்டவர்கள் மறைந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து சந்தேகத்திற்கு இடமான இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சாமி செட்டிபாளையம், பகவான் கார்டன், இடிகரை, பூச்சியூர் உள்ளிட்ட பகுதிகளில் நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.



இருவரையும் பிடித்து விசாரித்த போலீசார் அவர்களிடமிருந்து 105 பவுன் நகைகளை மீட்டனர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை இளமனுரை சேர்ந்த லாரி டிரைவர் பழனிச்சாமி மற்றும் இவரது மகன் சின்ன கருப்புசாமி என்று அழைக்கப்படுகின்ற அர்ஜுனன் என்பது தெரியவந்தது. அர்ஜுனன் போட்டோகிராபி தொழில் ஈடுபடுவதற்காக நகைகளை திருடி, மதுரைக்கு கொண்டு செல்வது வழக்கமாக வைத்திருந்து உள்ளார். திருடப்பட்ட நகைகளை பழனிச்சாமி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.



அர்ஜுனனிடமிருந்து ரூ.3.30 லட்சம் மதிப்புள்ள கேமராவும் கைப்பற்றப்பட்டது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...