சிறுமிக்குப் பாலியல் தொல்லை - கட்டட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டட மேஸ்திரிக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


திருப்பூர்: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி.

திருப்பூா் மாவட்டம், குண்டடம், பொட்டிக்காம்பாளையத்தைச் சோந்தவா் சுப்பிரமணி. கட்டட மேஸ்திரியான இவரிடம் சித்தாள் வேலைக்கு 35 வயது பெண் ஒருவா் வேலை செய்து வந்தாா். இவா் உடல்நலக்குறைவாக இருந்ததால், அவரது 15 வயது மகளை சுப்பிரமணி சித்தாள் வேலைக்கு கடந்த 2019 செப்டம்பா் 1 ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளாா். ஆனால் வேலைக்கு அழைத்துச்செல்லாமல் சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி வெளியூா் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், தாராபுரம் மகளிா் காவல் துறையினா் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா். சிறுமியை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், சுப்பிரமணிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2000 ஆயிரம் அபராமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...