திருப்பூர் அருகே கோயிலில் உண்டியலை திருடன் உடைக்க முயற்சி - சிசிடிவி காட்சிகள்

திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகர் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைக்கும் முயற்சி தோல்வியால் உண்டியலை திருடன் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


திருப்பூர்: உண்டியல் திருட்டு தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் தீவிர விசாரணை

போயம்பாளையம் அருகே குருவாயூரப்பன் நகர், ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்திலுள்ள விநாயகர் கோவில்உண்டியலில் பணம் திருட வந்த மர்மநபர் ஒருவர் உண்டியலை தூக்கி பார்த்தும், டேபிள் மீதிருந்த தீர்த்த கரண்டியை எடுத்து உண்டியல் உள்ளே போட்டும் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்க்க முயற்சித்துள்ளான்.



உண்டியலை பல முறை உடைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வி ஆனாதல் தொடர்ந்து உண்டியலை தூக்கி சென்ற மர்மநபர் அதிலிருந்த பணத்தை எடுத்து கொண்டு அருகில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் வீசி சென்று உள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...