உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.


திருப்பூர்: தனி நடனம் , குழு நடனம் , இசைக்கருவிகள் வாசித்தல் ,பேச்சுப்போட்டி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், ஓவியப்போட்டி, நுண் கலை போட்டிகள், விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி கலைத் திருவிழா மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.

உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் அப்துல் காதர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் சரவணக்குமார் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்றைய கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



குறிப்பாக தனி நடனம், குழு நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், பேச்சுப்போட்டி, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், ஓவியப்போட்டி, நுண் கலை போட்டிகள், விவாத மேடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.இதில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



கலைத் திருவிழாவை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள்மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...