ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு

ஜல்லிபட்டியில் போக்குவரத்து வசதி உள்ள மக்கள் பயன்படுத்த வசதி உள்ள இடத்தில் மையமான பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்துக் கொடுக்குமாறு உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் அவர்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.


கோவை: ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்குமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாதாரண மக்கள் நிறைந்து வாழும் ஜல்லிபட்டியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மற்றும் பலமுறை கிராம சபை கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்தோம். தற்போது சமுதாய நலக்கூடம் அமைத்திட ஏற்பாடு நடைபெறுவதாக தெரிய வருகிறது.

எனவே ஜல்லிபட்டியில் போக்குவரத்து வசதி உள்ள மக்கள் பயன்படுத்த வசதி உள்ள இடத்தில் மையமான பகுதியில் அமைத்துக் கொடுக்குமாறு உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் அவர்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுத்து பேசப்பட்டது.

இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மனு கொடுக்கும் இயக்கத்தில் கமிட்டி உறுப்பினர் சி.மாசாணி, அஜித் மற்றும் கருப்புசாமி, ரவிச்சந்திரன், சுரேஷ்குமார் மற்றும் மாதர் சங்கம் சார்பாக ஜல்லிப்பட்டி கிளை கிளைத்தலைவர் தெய்வானை, கமிட்டி உறுப்பினர் கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...