முருகன் பாடல், காவடி ஆட்டத்தை கண்டு ரசித்த தமிழக அமைச்சர்கள்

கோவை வ உ சி மைதானத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியில் ஒலித்த முருகன் பாடல் காவடி ஆட்டத்தை தமிழக அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.


கோவை: தெய்வீக பாடல்களையும், காவடி ஆட்டத்தையும் தமிழக அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.

கோவை வஉசி மைதானத்தில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதழாளர் கலைஞர் குழுவின் சார்பில் கலைஞரின் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் புகைப்பட கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி இன்றைய துவக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுது.



இந்நிலையில் பரதநாட்டிய நடனகுழுவினர் "சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா" என்ற பாடலுக்கு நடனமாடினர். தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க காவடி ஆட்டமும் ஆடினர்.

கலைஞர் நூற்றாண்டு விழாவின் புகைப்பட கண்காட்சியில் திடீரென முருகன் பாடல் பாடி,காவடி ஆட்டம் ஆடியது அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது. இதனை அமைச்சர்களும் கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...