தாராபுரத்தில் குறும்பட விருது வழங்கும் விழா - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு

தாராபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற குறும்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் விருதுகளை வழங்கினார்.


திருப்பூர்: உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக குறும்படத் திருவிழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்ட தலைமை மற்றும் தாராபுரம் நகர தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நடத்திய குறும்படத் திருவிழா-2023 தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் நூற்றுக்கு மேல் வந்த குறும்படங்களில் சிறந்த குறும்படங்களை தேர்வு செய்து முதல் மூன்று குறும்படங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசுகள் மற்றும் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி குறும்பட இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் கல்லூரி மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டு அதில் சிறந்த குறிப்பு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் நற்பணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...