திருப்பூரில் லியோ திரைப்படம் வெளியீடு - 20 அடி நீளமுள்ள கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்

திருப்பூரில் 20 அடி நீளமுள்ள கேக்கை விஜய் ரசிகர்கள் வெட்டி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் லியோ திரைப்படத்தை வரவேற்றனர்.


திருப்பூர்: தாராபுரம் சாலையில் உள்ள உஷா திரையரங்கில் விஜய் ரசிகர் விஜய் ஏற்பாட்டில் திரையரங்கம் முழுவதும் திருவிழா போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளியாகிறது.



பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தை வரவேற்கும் வகையில் திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள உஷா திரையரங்கில் விஜய் ரசிகர் விஜய் ஏற்பாட்டில் திரையரங்கம் முழுவதும் திருவிழா போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



மேளதாளத்துடன் சிங்கம் வேடமணிந்தவர்கள் நடனமாட கார் ஜீப் உள்ளிட்டவை முழுவதுமாக லியோ திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ஊர்வலமாக திரையரங்கிற்கு கொண்டு வரப்பட்டு விஜயின் புகைப்படங்கள் அடங்கிய 20 அடி நீளமுள்ள கேக் வெட்டப்பட்டு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது.



விஜய் ரசிகர்களின் இந்த செயலால் திரையரங்கம் முழுவதும் தீபாவளி பண்டிகை போல காட்சி அளித்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...