பூக்கட்டும் தொழிலாளர்களுக்கு கோவையில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள்

கோவை பூ மார்க்கெட் பகுதியில் பூ கட்டும் பெண் தொழிலாளர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உதவிகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.


கோவை: கோவையில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.



கோவை பூ மார்க்கெட் பகுதியில் பூ கட்டும் பெண் தொழிலாளர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உதவிகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.

இதில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் ட.முருகன் சிறப்புரையாற்றினார். அதில் அவர் கூறும்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை நமக்கு கொடுத்து உள்ளார். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், வீடு, வீடாக குடிநீர் கொடுக்கும் திட்டம், இலவச சமையல் எரிவாயு, முத்ரா திட்டம், சிறு வியாபாரிகளுக்கான திட்டம், விஸ்வகர்மா யோஜனா இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதியன்று பாரத பிரதமர் இந்தியா முழுவதும் துவக்கி வைத்தார்.

அதில் 18 வகையான தொழில் புரிபவர்கள் அதில் நகை செய்பவர்கள், மண்பானை செய்பவர்கள், தச்சர்கள், செருப்பு தைப்பவர்கள், பூ கட்டுபவர்கள், கைவினை பொருட்கள் செய்பவர்கள் போன்ற 18 வகையான தொழில் செய்பவர்களுக்கு பயனடைவார்கள் என்றும் இந்தியாவிலேயே முத்ரா லோன் திட்டத்தில் நமது சகோதரிகள் தான் இந்தியாவிலே இரண்டாம் இடம் பிடித்துள்ளனர் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...