பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் - கூடலூர் நகராட்சி தலைவர் ஆய்வு

கோவை கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பாடு, கட்டிடங்களின் உறுதித் தன்மை, சுகாதர வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து நகராட்சித் தலைவர் அறிவரசு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: பழுதடைந்த கட்டடங்களில் கல்வி பயின்ற மாணவர்கள் உடனடியாக வேறு அறைக்கு மாற்றப்பட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பாடு, கட்டிடங்களின் உறுதித் தன்மை, சுகாதர வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து நகராட்சித் தலைவர் அறிவரசு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10 அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை முறையாக செயல்படுகிறதா என்பது குறித்தும், ஆஸ்பெட்டாஸ் சீட் கூரை உள்ள பள்ளிக் கட்டிட்ங்களை கான்கிரீட் கட்டிடங்களாக மாற்ற ஏற்பாடுகள், புதிய வகுப்பறை கட்ட இடம் தேர்வு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.



ஆய்வில் நகராட்சி ஆணையாளர் மனோகரன் தலைமையில் பொறியாளர் ராஜேஷ், திட்டமிடுதல் ஆய்வாளர் பழனிசாமி, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நல்லாசிரியர் கருப்புசாமி, ஹரீட்டா ப்ளோரி, மேலாண்மை குழு பொறுப்பளர் காளியண்ணன், வட்டார ஒருங்கினைப்பாளர் சுமதி, சுகன்யா, ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

ஆய்வில் கலந்துகொண்ட நகராட்சி தலைவர் அறிவரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகளிடம் காலை உணவு குறித்து விசாரித்தார். மேலும் செல்வபுரத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஒரு வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதை பார்த்து அங்கிருந்த மாணவர்களை வேறு வகுப்புக்கு மாற்றி அந்த அரையை பூட்டிவைத்ததனர்.



உடனடியாக புதிய வகுப்பைறை கட்டவேண்டும் சிமெண்ட் சீட்டில் உள்ள வகுப்பறைகளை கான்கிரீட் கட்டிடமாக மாற்றவும், விறகு அடுப்பு உள்ள சமையல் கூடத்தில் கேஸ் வசதி செய்து கெடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் நகரமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி, ரேவதி, ரம்யா, மணிமேகலை, சித்ரா, வனிதாமணி, அகில்சந்திரசேகர், துரை செந்தில்குமார், பேங்க் முருகேசன், ஸ்ரீதர், பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்பழனிசாமி, பிட்டர் வேலாயுதம், காலை உணவு திட்ட பொறுப்பாளர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...