உடுமலையில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழா- ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடுமலைப்பேட்டை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன


திருப்பூர்: மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் கலைத்திருவிழாவில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடுமலைப்பேட்டை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கடந்த 18 ந்தேதி முதல் நாளை வரை நடைபெற்று வருகிறது. நேற்று 11 -12 வகுப்புகளுக்கும் இன்று 9 -10 வகுப்புகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை 6, 7, 8 வகுப்புகளுக்கும் கலைத் விழா போட்டிகள் நடக்கிறது.

மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் இந்த போட்டிகளில் போட்டிகளில் உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.



பள்ளி அளவில் சுமார் 400 மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் பள்ளியளவில் முதலிடம் பெற்ற சுமார் 200 மாணவியர்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் வட்டார அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.



இன்று நடைபெறும் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பிற்கான போட்டிகளில் மொத்தமாக 74 மாணவியர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா அவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ் ஆசிரியர்கள் த வே சின்னராசு, ஆர் ராஜேந்திரன், பட்டதாரி ஆசிரியை வை.விஜயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...