நாளை திறப்புவிழா காண்கிறது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம்: முதலமைச்சர் பங்கேற்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக அவ்வளாகத்தில் காலியாக இருந்த இடம் ஒதுக்கப்பட்டு, அதில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும், புதிய கட்டிடத்திற்கா சுமார் 20.18 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்றன. 

கட்டிடம் முழுதாக கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் தமிழக அரசியல் காரணங்களால் திறப்புவிழா நடத்த காலதாமதமானது.  இந்த நிலையில், நாளை புதிய கட்டிடம் திறக்கப்ப்ட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  நாளை காலை 10:30 மணிக்கு நடைபெற இருக்கும் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அவருடன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், தமிழக அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 



விழா முடிந்ததும் கொடீசியா அரங்கத்திற்கு செல்லும் முதலமைச்சர், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளை துவங்கி வைப்பதோடு, 6 ஆயிரத்து 200 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட் உதவிகள் வழங்க உள்ளார்.

முதலமைச்சர் கோவை வருகையை ஒட்டி கோவை தொழில் முனைவோர் சங்கங்களின் சார்பில் முதலமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...