அண்ணாமலை பேனர்கள் அகற்றம் - கருமத்தம்பட்டி பாஜகவினர் சாலை மறியல்

சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் என் மக்கள், என் பயணம் நடைபயணத்தில் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்ட பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட விளம்பர பேனர்களை போலிசர் அகற்றியதால் பாஜகவினர் மறியல் நடத்தினர்.


கோவை: பாஜக தமிழக தலைவரை வரவேற்க வைக்கபட்ட அண்ணாமலை பேனர்கள் அகற்றபபட்டதால் கருமத்தம்பட்டி பாஜகவினர் சாலை மறியல்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று பல்லடம் சட்டமன்ற தொகுதி மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் அவரது நடைபயணம் நடக்கிறது. இதையடுத்து அவரை வரவேற்கும் விதமாக கருமத்தம்பட்டி நகர பா.ஜ.க.வினர் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட விளம்பர பேனர்கள் வைத்தனர்.

இந்த நிலையில் முறை யான அனுமதி பெறாமலும், நகராட்சி அனுமதியின்றியும் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி போலீசார் பேனர்களை அகற்றியதுடன், பேனர் ஏற்றி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் கரும த்தம்பட்டி நால்ரோட்டில் குவிந்தனர். அவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி, கரும த்தம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

போராட்ட த்தில் ஈடுபட்ட பா.ஜ.க வினரிடம் போலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் தொடர்ந்து போராட்ட த்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பா.ஜ.கவினர் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலைமறியல் காரணமாக அந்த சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...