சம்பள உயர்வு வேண்டும் - கோவையில் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கத்தினர் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: சம்பளம் பிரச்சனை தொடர்பாக 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 7,500 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்கள் அனைவருக்கும் 20223 ஆம் ஆண்டு ஒரு 721 ரூபாய் சம்பளம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 2023- 24 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளத்தை இதுவரை தரவில்லை. நீண்ட நாட்களாக ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், டிரைவர், கிளீனர்கள் அனைவருக்குமே இதுவரை வழங்கவில்லை.



இதனைக்கண்டித்து கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பாக கோவை வ.உ.சி மைதானத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



இந்த காத்திருப்பு போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட ஆண்கள், 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.



மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி வழங்கக்கூடிய சம்பளத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...