ஆயுத பூஜையை முன்னிட்டு உடுமலையில் பொரி உற்பத்தி தீவிரம் - தமிழக அரசு மானியம் வழங்க கோரிக்கை

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நெருங்குவதால் உடுமலை பகுதிகளில் பொரி உற்பத்தி கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.


திருப்பூர்: நலிவு அடைந்து வரும் பொரி தொழிலை மேம்படுத்தவும்,இதனை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு அடையயவும், தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நெருங்குவதால் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள ஏரிப்பாளையம், கொமரலிங்கம், கொழுமம், பாப்பன்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் பொரி உற்பத்தி கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பொரி தயாரிக்க பயன்படும் அரிசி, கல்கத்தா மற்றும் கர்நாடகவில் இருந்து டன் கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு கிலோ அரசி கிலோ 25 ரூபாய் க்கு விற்று வந்த நிலையில் தற்போது கொள்முதல் விலை, மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ரூ.35 ரூபாய் விற்பனை ஆகி வருகிறது. இதற்கிடையில் இந்த அரிசியை நீரில் ஊற வைத்து, சூரிய ஒளியில், உலர வைத்து, சிறு குவியல்களாக குவித்து வைக்கப்படுகிறது. பின்பு அதில் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா மற்றும் ஆற்று மணல் ஆகியவை தேவைக்கு தகுந்த அளவில் சேர்த்து, சில மணி நேர பக்குவம் செய்யப்படுகிறது. பின்பு, இந்த அரிசியை பொரி உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் (பொரிஅடுப்பு) கொட்டி, இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வேக வைக்கும் பொழுது, சுவைமிகுந்த பொரி உற்பத்தியாகிறது. இதை மூட்டைகளில் சேகரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

பொரி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:பொரியை படி மற்றும் பக்கா அளவில் கொடுக்கிறோம். 110லிட்டர் கொண்ட ஒரு மூட்டை தற்போது மூலப்பொருள் விலை உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூபாய் 500 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகின்றது. இருப்பினும் பொரி உற்பத்திக்கு மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஆட்கூலியும் உயர்ந்து இருப்பதால் பொரி உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறைந்த அளவு கிடைக்கிறது. மேலும் உடுமலை நகராட்சி ஏரிப்பாளையம் பகுதியில் மட்டும் சுமார் 60 க்கும் குடும்பங்களுக்கு மேல் பொரி உற்பத்தி செய்துவந்த நிலையில் காலப்போக்கில் இத் தொழில் நலிவடைந்து தற்போது திருப்பூர், கோவை பனியன் கம்பெனி உட்பட பல்வேறு மாற்று தொழிலுக்கு சென்று விட்டார்கள்.

ஆகையால் நலிவு அடைந்து வரும் இத்தொழிலை மேம்படுத்தவும் பொரி உற்பத்தி நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு அடைய தமிழக அரசு இந்த இயந்திரங்கள் வாங்க கடன் உதவியும் மற்றும் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் மற்றும் மேலும் குடிசைத் தொழிலாக செய்து வந்தாலும் வழக்கமான தொழில்களுக்கான மின் கட்டணமே செலுத்தும் நிலை உள்ளது எனவே பாரம்பரிய தொழிலை காப்பாற்றும் வகையில் மின் கட்டணத்தில் சலுகை மற்றும் ஆணியும் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...