உடுமலை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி விழா - அன்னலட்சுமி அலங்காரத்தில் காட்சி

உடுமலை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளில் அன்னலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


திருப்பூர்: ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி விழாவில், கடவுளின் திருவுருவங்கள், தசாவதாரம், கிருஷ்ண லீலை, முளைப்பாரி எடுத்தல், கோபியர் நடனம், விளக்கு பூஜை, திருமண உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் கொழு பொம்மைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு பூமாலை சந்து பகுதியில் அருள்மிகு ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த நிலையில் ஐந்தாம் நாளில் அன்னலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



மேலும் கோவில் பகுதியில் கடவுளின் திருவுருவங்கள், தசாவதாரம், கிருஷ்ண லீலை, முளைப்பாரி எடுத்தல், கோபியர் நடனம், விளக்கு பூஜை திருமண உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் கொழு பொம்மைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது.



பெண்கள் அனைவரும் பத்தி பாடல்கள் பாடினர்.



நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...