தாராபுரத்தில் திடீரென கேட்ட பயங்கர வெடி சத்தம் - 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கேட்டதால் மக்கள் அச்சம்

தாராபுரத்தில் இன்று காலை 11 மணியளவில் திடீரென பயங்ர வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சத்தம் கேட்ட நேரத்தில் வானம் புகை மண்டலம் போல் காட்யளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திடீரென ஏற்பட்ட வெடி சத்தம், விண்கற்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட சத்தமா அல்லது நில அதிர்வு காரணமா என ஒருவருக்கொருவர் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திடீரென காலை 11 மணி 50 நிமிடத்தில் ஊரையே குலுக்கும் அதி பயங்கர வெடி சத்தம் வந்தது. இந்த சத்தமானது சுமார் 20கிலோமீட்டர் தொலைவிலுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த வெடி சத்தத்தை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தபோது வானில் புகைமண்டலமாக காணப்பட்டது என தெரிவிக்கின்றனர்.

மேலும் ஒரு முறை ஏற்பட்ட மிக பயங்கர வெடி சத்தத்தால் வானில் விண்கற்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டதால் ஏற்பட்ட சத்தமா அல்லது நில அதிர்வு காரணமா என ஒருவருக்கு ஒருவர் செல்போன் மூலம் ஒருவருக்கொருவர் விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் சத்தம் குறித்த பதிவுகள் வைரலாக பரவி வருகின்றன.

இதுகுறித்து தாராபுரம் காவல் துறையும் வருவாய்த் துறையும் இதுவரை முறையான விளக்கம் அளிக்கவில்லை.

தாராபுரம் நேதாஜி தெரு சின்ன கடைவீதி ஆகிய குடியிருப்பு பகுதியில் இருந்த பொதுமக்கள் வீட்டை விட்டு அலறி அடித்தபடி வெளியே அதிர்ச்சியுடன் வானத்தையே பார்த்தனர் இதனால் தாராபுரம் மூலனூர் குண்டடம் இதனைச் சுற்றியுள்ள 20க்கு மேற்பட்ட நகர் மற்றும் கிராம பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...