அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம் - நகராட்சி நடவடிக்கை

தாராபுரம் நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், நகராட்சி பகுதியை ஆக்கிரமிப்பு செய்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து நடவடிக்கை.


திருப்பூர்: நகராட்சி எல்லைப் பகுதியை அனுமதி பெறாமல் ஆக்கிரமிப்பு செய்து விளம்பர பதாதகைகள் உடனடியாக அகற்றம்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆற்றல் பவுண்டேஷன் நிறுவனத்தால் 10-ரூபாய்க்கு மருத்துவம் என தாராபுரம் வட தாரை பகுதியில் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



ஆற்றல் பவுண்டேஷன் நிறுவன தலைவர் அசோக்குமார் நிர்வாகி ரிப்பன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார்.



இந்த நிலையில் தாராபுரம் நகராட்சியில் முன் அனுமதி பெறாமல் நகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மருத்துவமனையின் விளம்பர பதாய்கள் வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் அளித்ததை அடுத்து நகராட்சி நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் நகராட்சி ஆணையாளர் பாரிஜான், ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து அனுமதியின்றி ஆற்றல் பவுண்டேஷன் நிறுவனத்தால் வைக்கப்பட்ட மருத்துவமனை பதாகைகளை கழட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.



ஆற்றல் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் தாராபுரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் மற்றும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தங்கள் பகுதியில் அனுமதி இன்றி மருத்துவமனை நடத்த வேண்டும் அனுமதியின்றி மருத்துவமனை நடத்துவதால் உயிர் சேதங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது போலி மருத்துவர்கள் மூலம் மருத்துவம் பார்ப்பதால் தாராபுரம் பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனை அனுமதி மற்றும் பதாகைகள் வைக்க நகராட்சியில் அனுமதி வேண்டும் என தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் இரு தரப்பினருக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்பேது ஆற்றல் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் அசோக்குமார் 10-ரூபாய்க்கு ஏழை எளிய மக்களுக்கு நாங்கள் மருத்துவம் பார்க்கிறோம் முறைப்படி படித்த மருத்துவர்கள் வைத்து மருத்துவம் பார்க்கிறோம்.

இலவசமாக மருந்து மாத்திரைகள் கொடுக்கிறோம் இங்கு அரசியல் ஆதாயத்திற்காக எங்கள் சேவையை தடுத்து நிறுத்துகிறார்கள் என தெரிவித்தார்.

இதனால் ஆற்றல் பவுண்டேஷன் நிறுவனத்தால் 10-ரூபாய்க்கு மருத்துவமனை திறப்பு விழா நடந்தும் நோயாளிகள் யாரும் மருத்துவம் பார்க்க வரவில்லை. அனுமதி பெறாமல் உள்ளதால் அனுமதி பெற்ற பிறகு மருத்துவமனை செயல்பட வேண்டும் என நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன். தெரிவித்ததால் 10-ரூபாய்க்கு தொடங்கப்பட்ட மருத்துவமனை மருத்துவமனையில் தற்காலிகமாக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனால் வடதாரை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடந்த சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாராபுரம் நகராட்சி நகர் மன்ற தலைவரிடம் பாப்பு கண்ணனிடம் இது குறித்து விளக்கம் கேட்ட போது நகர் மன்ற தலைவர் பாபு கண்ணன் கூறியதாவது:-

தாராபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட வடை தாரை திருப்பூர் சாலை பகுதியில் தனி நபருடைய சுயநலத்திற்காக சுகாதாரத் துறை இடமும் நகராட்சி நிர்வாகத்திடமும் முறையாக அனுமதி பெறாமல் இன்று மருத்துவமனை தொடங்கப்பட்டது இதனை அடுத்து பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தபோது நகராட்சி எல்லைப் பகுதியை அனுமதி பெறாமல் ஆக்கிரமிப்பு செய்து விளம்பர பதவிகள் வைக்கப்பட்டிருந்தது உடனடியாக அனைத்து விளம்பரப் பதாகைகளையும் அகற்றப்பட்டது என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...