வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி ஐந்து மாணவர்கள் பலி - சுற்றுலா வந்த போது விபரீதம்

கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர் ஆற்றில் குளித்து மகிழ்ந்து விளையாடி செல்கின்றனர். இந்நிலையில் கோவை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிணத்துக்கடவு தனியார் கல்லூரியில் படிக்கும் 10 மாணவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வால்பாறையை சுற்றி பார்க்க வந்துள்ளனர்.

பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள நல்ல காத்து ஆற்றில் குளித்து விளையாடினர். அதில் ஐந்து பேர்கள் தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் நீரில் சிக்கி உள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற போது ஒருவர் பின் ஒருவராக தண்ணீருக்குள் மூழ்கி உள்ளனர். இதை கரையில் இருந்து பார்த்த ஐந்து நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர்.



அப்பொழுது அவர் வழியாக பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து தீயணைப்பு துறையினர் தண்ணீரில் இறங்கி மூழ்கி உயிரிழந்த சரத், அஜய், ரபேல், தனுஷ், வினித் ஆகிய ஐந்து பேர்களின் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.



சுற்றுலா வந்த இடத்தில் தண்ணீரில் மூழ்கி ஐந்து பேர் இறந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...