துடியலூர் அருகே மான்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு - பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத்துறையினர்

கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் மான் குட்டியை விழுங்கி விட்டு நகர முடியாமல் இருந்த மலைப் பாம்பை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.


கோவை: மான் குட்டியை விழுங்கி விட்டு நகர முடியாமல் இருந்த மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் சி.ஆர்.பி.எப். எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் நேற்று இந்த பயிற்சி மையத்தின் வளாகத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று இரையை விழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்துள்ளது.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.



அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மலைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். அப்போது அந்த பாம்பு குட்டி மானை விழுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...