கோவையில் ரூ.779 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சியில்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ள மற்றும்‌ புதிதாக சோ்க்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பவானி ஆற்றின்‌ நீர்‌ ஆதாரமாக கொண்ட பில்லூர்‌-III குடிநீர் திட்டம்‌ ரூ.779 கோடி மதிப்பீட்டில்‌ மேட்டுப்பாளையம்‌, நெல்லித்துறை ஊராட்சி, முருகையன்‌ பரிசல்துறை, மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌, கட்டன்மலை ஆகிய இடங்களில்‌ நடைபெற்றுவரும்‌ கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ பார்வையிட்டார்.


கோவை: பில்லூர்‌-III குடிநீர் திட்டம்‌ ரூ.779 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று கட்டுமானப்பணிகளை மாநகராட்சிஆணையாளர் நேரில் ஆய்வு செய்து, போர்கால அடிப்படையில்‌ பணிகளை செய்து முடித்திட அறிவுறுத்தினார்.



கோவை மாநகராட்சிக்கு குடிநீர்‌ ஆதாரமாக விளங்கும்‌ பில்லா அணையிலிருந்து குடிநீர் வழங்க பில்லார்‌-III திட்டம்‌ 2035ம்‌ ஆண்டு கோவை மாநகராட்சியிலுள்ள மக்கள்‌ தொகையை கருத்தில்‌ கொண்டு திட்டம்‌ தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம்‌ ரூ.779 கோடி மதிப்பில்‌ மேட்டுப்பாளையம்‌, நெல்லித்துறை ஊராட்சி, முருகையன்‌ பரிசல்துறை, மருதூர்‌ ஊராட்சி, கண்டிப்பெருமாள்புரம்‌ மற்றும்‌ கட்டன்மலை ஆகிய இடங்களில்‌ கட்டுமான பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் குழாய்‌ பதித்தல்‌ போன்ற பணிகள்‌ நடைபெற்றுவருகிறது.

இப்பணிகளில்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, போர்கால அடிப்படையில்‌ பணிகளை செய்து முடித்திட அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்‌ நெல்லித்துறை ஊராட்சி, முருகையன்‌ பரிசல்துறை பகுதியில்‌ ரூ.134 கோடி மதிப்பீட்டில்‌ தலைமை நரேற்று நிலையம்‌ கட்டுமானப்‌ பணி பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடிக்க தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டூள்ளது.



அதனைத்‌ தொடர்ந்து, முருகையன்‌ பரிசல்துறை பகுதியிலிருந்து மருதூர்‌ ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம்‌ பகுதியில்‌ பில்லூர்‌ அபிவிருத்தி திட்டம்‌-॥, ரூ.104.90 கோடி மதிப்பிட்டில்‌ 178 MLD குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பு மற்றும்‌ கட்டுமானப்பணிகள்‌ இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மீதமுள்ள பணிகள்‌ விரைவில்‌ முடிக்க அறிவுறுத்தப்பட்டு, கட்டுமானப்பணிகளின்‌ தரமும்‌ ஆய்வு செய்யப்பட்டுள்ளது.



அதன்பின்னர்‌, கட்டன்மலை பகுதியில்‌ ரூ.62.00 கோடி மதிப்பில்‌ 900 மீட்டர் தொலைவிற்கு சுரங்கம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ முழுமையாக நிறைவுபெற்றுள்ளது. இப்பகுதியில்‌ குடிநீர் குழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்‌ தொடர்ந்து, இவ்விடத்திலிருந்து பன்னிமடை பகுதியில்‌ ரூ.104 கோடி மதிப்பீட்டில்‌ 73 இலட்சம்‌ லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட இரண்டூ குடிநீர் சேகரிப்பு நிலையங்களின்‌ கட்டுமானப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை நேரில்‌ பார்வையிட்டு, மாநகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர்‌ வழங்கிட ஏதுவாக போர்க்கால அடிப்படையில்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொண்டு பணியினை பருவமழை துவங்குவதற்குள்‌ முடிக்க வேண்டுமெனவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி செயற்பொறியாளர்‌ இளங்கோவன்‌, தமிழ்நாடு குடிநீர்ர்‌ வடிகால்‌ வாரிய நிர்வாக பொறியாளர்‌ செந்தில்குமார்‌, உதவி நிர்வாக பொறியாளா்கள்‌ பட்டன்‌, ராதா, உதவிப்‌ பொறியாளர்கள்‌ சரவணன்‌, நந்தகுமார்‌, செல்வராஜ்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...