பல்லடம் அருகே புதிய திட்டங்கள் துவக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழா - எம்எல்ஏ ஆனந்தன் பங்கேற்று திறப்பு

பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குணங்கள் பாளையத்தில் புதிய திட்டங்கள் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பல்லடம் எம்எல்ஏ பங்கேற்று திறந்து வைத்தார்.


திருப்பூர்: ரூபாய் 6.5 லட்சம் மதிப்பீட்டில் குன்னங்கள்பாளையம் கிறிஸ்தவ காலனிக்கு கான்கிரீட் சாலை அமைத்தல்,ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கரைப்புதூர் ஊராட்சியுடன் இணைந்து எம்எல்ஏ ஆனந்தன் நூறு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குண்ணங்கள் பாளையம் கிராமத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



இதே போன்று ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் ஆறு லட்சம் மதிப்பீட்டில் குன்னாங்கல்பாளையத்தில் RO குடிதண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், ரூபாய் 6.5 லட்சம் மதிப்பீட்டில் குன்னங்கள்பாளையம் கிறிஸ்தவ காலனிக்கு கான்கிரீட் சாலை அமைத்தல், ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கரைப்புதூர் ஊராட்சியுடன் இணைந்து நூறு மரக்கன்றுகள் நடவு செய்தனர்.



இதன் தொடர்ச்சியாக இன்று பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம் ஆனந்தன் பங்கேற்று நிறைவுற்ற திட்டங்களின் கட்டிடங்களை திறந்து வைத்தார். புதிதாக துவங்கப்பட உள்ள திட்டங்களுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் திட்டங்களை துவக்கி வைத்தார். கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேபி பரமசிவம், கரைப்புதூர் ராமமூர்த்தி, கோவர்த்தினி லோகநாதன், 1 வது வார்டு மெம்பர் ஜோதி முத்துசாமி மூன்றாவது வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...