உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா - பரதநாட்டியம் அரங்கேற்றம்

உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவில் மாணவ,மாணவியரின் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது. இதனை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து மக்கள் கண்டுகளித்தனர்.


திருப்பூர்: நவராத்திரி திருவிழாவில் கடவுளின் திருவுருவங்கள், திருமணம் மற்றும் பல்வேறு வகையான புரண காலத்து நிகழ்வுகள், கொழு பொம்மைகளாக வைக்கப்பட்டிருந்தன.

திருப்பூர் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி கொழுவிழா கடந்த 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவக்கியது.



தினமும் ஒரு அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று ஏழாவது நாளில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



மேலும் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கடவுளின் திருவுருவங்கள், திருமணம் மற்றும் பல்வேறு வகையான புரண காலத்து நிகழ்வுகள், கொழு பொம்மைகளாக வைக்கப்பட்டிருந்தன. கொழு கண்காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.



மேலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...