உடுமலை அருகே கருப்பண்ணசாமி கன்னிமார் கோவிலில் வள்ளி கும்மியாட்டம்

உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் கிராம ஊராட்சி செங்குளம் மதகடி கருப்பண்ணசாமி கன்னிமார் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு முத்தாலம்மன் கலைக்குழு சார்பில் பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.


திருப்பூர்: கருப்பண்ணசாமி கன்னிமார் கோவிலில் நடைபெற்ற விழாவில் சிறுவன் ஒருவன் கடவுள் வேடமனிந்து நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் கிராம ஊராட்சி செங்குளம் மதகடி கருப்பண்ணசாமி கன்னிமார் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு முத்தாலம்மன் கலைக்குழு சார்பில் பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒரே மாதிரியான உடை அணிந்தும் மற்றும் காலில் சலங்கை கட்டி பக்தி பாடல்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு நடனம் ஆடினர். மேலும் சிறுவன் ஒருவன் கடவுள் வேடமனிந்து நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பின்னர் ஆசிரியர் கூறும் பொழுது. பாரம்பரியமான கலைகள் நாளடைவில் அழிந்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக வள்ளி கும்மியாட்டம் பவள கொடி கும்மியாட்டம் முறையாக பயிற்சி எடுத்து பல்வேறு கோவில் விழாக்களில் ஆடி வருகின்றோம்.

எங்களது முக்கிய நோக்கம் பாரம்பரியமான கலைகளை மீட்டெடுப்பது ஒன்று மட்டும் தான் மேலும் அரசு விழாக்களில் எங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் வள்ளி கும்மியாட்டத்தில் ஈடுபட்டால் நோய் நொடியின்றி அனைவருக்கும் புத்துணச்சியாக இருப்பார்கள், மனதில் ஒருவித சந்தோஷமும் ஏற்படும் கவலைகள் மறந்து மகிழ்ச்சி என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை பெண்கள் வள்ளி கும்மியாட்ட பயிற்சிகள் ஈடுபட்டால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என்று பேசினார் வள்ளி கும்மி ஆட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்குளம் மதகடி கருப்பண்ணசாமி கன்னிமார் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...