கோவையில் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 2 - கோவை உட்பட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற “தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 2” ல் சென்னை, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு கவனத்தை ஈர்த்தனர்.


கோவை: தமிழ்நாடு சைக்கிள் லீக் சீசன் 2” சைக்கிள் பந்தயத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை கொண்ட 8 அணிகள் கலந்து கொண்டன.



“தமிழ்நாடு சைக்கிள் லீக் சீசன் 2” சைக்கிள் பந்தயம் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ‘கரி மோட்டார் வே’ வில் நடைபெற்றது. இதில் சென்னை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை கொண்ட 8 அணிகள் கலந்து கொண்டனர்.



மொத்தம் 6 சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியில் முதல், இரண்டு, மூன்று என வரும் அணிக்கு புள்ளிகள் வழங்கப்பட்டது.



புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவார்கள். சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த “தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 2” இறுதி போட்டிகள் நளை நடைபெற உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...