வால்பாறையில் 5 கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

கிணத்துக்கடவு பகுதியில் இருந்து சுற்றுலா வந்து நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கும் பொழுது ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.


கோவை: வால்பாறையில் சுற்றுலா வந்து உயிரிழந்த மாணவர்களின் விவகாரத்தையடுத்து, அமைச்சர் முத்துசாமி ஆலோசனை நடத்தினார். இதில், அனைத்து துறை அதிகாரிகளும், 21 வார்டு உறுப்பினர்களும், பொது மக்களும் கலந்து விபத்தை தடுக்க பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர்.



கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு கிணத்துக்கடவு பகுதியில் இருந்து சுற்றுலா வந்த 10 கல்லூரி மாணவர்கள் நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கும் பொழுது ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். அவர்கள் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது போன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டம் பொறுப்பு அமைச்சரும், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை அமைச்சருமான முத்துசாமி மற்றும் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, மாவட்ட செயலர் தளபதி முருகேசன், மற்றும் நகர செயல்லார் சுதாகர், அரசு அதிகாரிகள் நகரமன்ற துணை தலைவர் தா மா செந்தில்குமார் ஆகியோர்கள் விபத்து நடந்த ஆற்று பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.



ஆற்றில் இறந்தவர்கள் புகைப்படத்துடன் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆற்ருக்கு பொதுமக்கள் செல்லாதவாறு வேலி அமைத்து தடை விதிக்கலாம் என்றும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் தடுக்க ஏற்பாடு செய்வதாகவும் ஆய்வு செய்தனர்.



பின்பு நகராட்சி அலுவலகத்தில் இந்த சம்பவம் குறித்து கலந்து ஆலோசனை நடத்தப்பட்டது.



இதில் அனைத்து துறை அதிகாரிகளும் 21 வார்டு உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து விபத்தை தடுக்க பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர். அப்பகுதியில் கேமரா மற்றும் கவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட ஆலோசனை தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...