கோவையில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத்திட்ட பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ மற்றும்‌ தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ சீர்மிகு நகரத்திட்ட பணிகள்‌, பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: மத்திய மண்டலம்‌, வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி.பூங்கா மைதானம்‌ சாலையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள மழைநீர் வடிகால்‌ கால்வாயினை உடனடியாக தூர்வாரிட சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ மற்றும்‌ தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்றுவரும்‌ சீாமிகு நகரத்திட்ட பணிகள்‌, பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌‌ இன்று (22.10.2023) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.83க்குட்பட்ட வ.உ.சி.பூங்கா மைதானம்‌ அருகில்‌ உள்ள சாலையில்‌ NUHM நிதியின்‌ கீழ்‌ ரூ.1 கோடி மதிப்பீட்டில்‌ ஆரோக்கியமான மற்றும்‌ சுகாதாரமான உணவுள்ள தெரு அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைவில்‌ தொடங்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌, வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி.பூங்கா மைதானம்‌ சாலையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள மழைநீர் வடிகால்‌ கால்வாயினை உடனடியாக தூர்வாரிட சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர்‌, தெற்கு மண்டலம்‌ குறிச்சி குளத்தில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.52.16 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ புனரமைப்புப்‌ பணிகள்‌ மற்றும்‌ குனியமுத்தூர்‌ பகுதியில்‌ பறவைகள்‌ சிற்பம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னா்‌, கோவை‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ ரூ.591.14 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ குறிச்சி குனியமுத்தார்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகளில்‌ ஒருபகுதியாக குனியமுத்தூர்‌ பகுதியில்‌ பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, போத்தனூரா- சுந்தராபுரம்‌ இணைப்பு சாலை பணிகளை ஒருவார காலத்திற்குள்‌ முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலாகளுக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வெள்ளலார்‌- சிங்காநல்லூர்‌ பிரதான சாலையில்‌ கட்டப்பட்டுவரும்‌ புதிய மேம்பாலம்‌ பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில்‌ இருந்து பில்லூர்‌-1ன்கீழ்‌ குறிச்சி பகுதிக்கு தண்ணீர் கொண்டுசெல்லும்‌ பிரதான குழாயினை மேம்பாலத்தின்‌ அருகே மாற்றி அமைப்பதற்கான சாத்திய கூறுகள்‌ குறித்து கேட்டறிந்தார்‌.



பின்னர்‌, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைக்கப்பட்டுள்ள மாதிரி சாலையின்‌ ஒருபகுதியாக தாமஸ்பார்க்‌ சந்திப்பில்‌ அமைக்கப்பட்டுள்ள மீடியா டவர்‌ (Media Tower) அலங்கார செயற்கை நீர்வீழ்ச்சி (Water Falls)ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டார்‌.



இந்த ஆய்வுகளின்போது துணை மேயா்‌ ரா.வெற்றிசெல்வன்‌, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அஸ்லாம்‌ பாஷா, பாபு, உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள்‌ கனகராஜ்‌, ஹேமலதா,பிரபாகரன்‌, உதவி பொறியாளர்கள்‌ விமல்ராஜ்‌, சரவணக்குமார்‌, சபரிராஜீ, கமலக்கண்ணன்‌, சுகாதார ஆய்வாளா்‌ ஏமீரங்கராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...