தாராபுரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை - ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 4-பேர் கைது

தாராபுரம் அருகே கழுத்தில் கத்தியை வைத்து வீட்டின் உரிமையாளரிடம் பணத்தை பறித்து சென்ற நான்கு பேரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: சொந்தமாக ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சிவசக்தி காலனி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் லிங்கேஸ்வரன் (47). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாயார் ருக்குமணி. தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பெஸ்ட் நகர் பகுதியில் ருக்குமணி தனியாக வசித்து வருகிறார். ருக்குமணிக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாததால் திருப்பூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். சிகிச்சைக்காக மகள் வீட்டுக்கு சென்ற நிலையில், மருத்துவ செலவுக்காக பணம் தேவைப்பட்டதால், தாராபுரம் பெஸ்ட் நகரில் உள்ள ருக்குமணி வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்துவர லிங்கேஸ்வரன் அதிகாலை சுமார் 3 மணி அளவில் சென்றுள்ளார்.

அப்போது, ருக்குமணி வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். மேலும் வீட்டிற்குள் திருட முயற்சி செய்வதற்காக தாராபுரம் சங்கர்மில் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான், தாராபுரம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய இருவரும் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்தனர். வெளியே நின்று கொண்டிருந்த குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, தினேஷ்குமார் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருந்தார். கத்தியினால் கழுத்தை அறுத்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் திருமூர்த்தி மற்றும் ரகுமான், தினேஷ்குமார் ஆகிய மூவரும் லிங்கேஸ்வரனை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

உடனே இச்சம்பவம் குறித்து லிங்கேஸ்வரன், தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.



அங்கு தேடிய போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ரகுமான் (35), அஷ்ரப் (26), திருமூர்த்தி (24), தினேஷ்குமார் (25) ஆகிய 4-பேரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அஷ்ரப் பகலில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராகவும், இரவில் திருடனாகவும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்புலன்ஸ் சொந்தமாக வாங்குவதற்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.



மேலும் கைது செய்யப்பட்ட 4-பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தாராபுரம் குற்றவியல் நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...