திருப்பூரில் பர்மிட் சீட்டு இல்லாமல் அதிக லோடு ஏற்றி முறைகேடு - டிப்பர் லாரி உரிமையாளர்கள் புகார்

பர்மிட் சீட்டு என்ற அனுமதிச்சீட்டு ஒரு சீட்டை உபயோகப்படுத்தி ஐம்பது லோடு வரை கல்குவாரிகளில் கனிமங்களை வெட்டி எடுக்கின்றனர் என்று திருப்பூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: அரசாங்கத்தின் அனுமதி காலம் முடிவடைந்த கல் குவாரிகளிலும் இரவு நேரங்களில் இல்லீகல் மைனிங் செய்து அதன் மூலம் மிகக் குறைந்த விலையில் மூலப் பொருட்களை எடுப்பதாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் எம்சாண்ட் ஜல்லி போன்ற பொருட்களை மிகவும் குறைந்த விலையில் விற்பதாக கூறிக்கொண்டு கோவை மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர்.

கோவை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி தொழில் சமீப காலமாக மிகவும் நலிவடைந்து தினசரி லாரிகளுக்கு வாடகை கிடைப்பது மிகவும் சிரமமாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல் குவாரிகளில் சட்டவிரோதமான மைனிங் செய்து எடுக்கப்படும் மூலப் பொருட்கள் மிகவும் மலிவான விலையில் கிரஷர் உரிமையாளர்களுக்கு கிடைப்பதால் அந்த கிரசர் உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி அரசாங்கம் சுட்டிக்காட்டி உள்ள ஆழத்திற்கு பல மடங்கு அதிகமாக ஆழத்தில் கற்களை வெட்டி எடுக்கின்றனர்.

பர்மிட் சீட்டு என்ற அனுமதிச்சீட்டு ஒரு சீட்டை உபயோகப்படுத்தி ஐம்பது லோடு வரை கல்குவாரிகளில் கனிமங்களை வெட்டி எடுக்கின்றனர். மேலும் அரசாங்கத்தின் அனுமதி காலம் முடிவடைந்த கல் குவாரிகளிலும் இரவு நேரங்களில் இல்லீகல் மைனிங் செய்து அதன் மூலம் மிகக் குறைந்த விலையில் மூலப் பொருட்களை எடுத்து அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் எம்சாண்ட் ஜல்லி போன்ற பொருட்களை மிகவும் குறைந்த விலையில் விற்பதாக கூறிக்கொண்டு கோவை மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காரணம் பேட்டை கோடாங்கி பாளையம் பகுதிகளை சேர்ந்த சில கிரஷர்கள் தரம் இல்லாத தமிழக அரசு நிர்ணயத்த தரமான எம் சாண்ட் பிசாண்ட் ஜல்லி கற்கள் வினியோகம் செய்யாமல் மிகவும் தரம் இல்லாத கட்டுமானத்திற்கு ஏற்றவாறு இல்லாத பொருட்களை அளவு குறைந்த லாரிகளில் கோவை மாவட்டத்தில் விநியோகம் செய்கின்றனர்.

இதனால் கோவை மாவட்டத்தில் அரசின் அனுமதி பெற்று முறையாக இயங்கிக் கொண்டிருக்கின்ற கல்குவாரிகள்,டிப்பர் லாரி உரிமையாளர்கள், மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் கொண்டு செல்லும் கனிமவளத்திற்கு அரசாங்க விதிகளின்படி டிரான்சிஸ்ட் பாஸ் எடுக்க வேண்டும் என்ற விதியை திருப்பூர் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் பின்பற்றாமல் அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி அதன் மூலம் நமது தொழிலையும் மிகவும் நலிபடைய வைக்கின்றனர். இந்த காரணங்களால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த SVA கிரஷர், AGP கிரஷர் மற்றும் காரணம் பேட்டை கோடாங்கி பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நிறுவனங்களின் கல் குவாரிகளை மறு சர்வே செய்து எக்ஸஸ் மைனிங், இல்லிசிட் மைனிங், மற்றும் போலி யான அரசு நடை சீட்டு உபயோகப்படுத்துதல் போன்றவற்றை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கின்றோம்.

இது சம்பந்தமாக மாநில கனிமவள இயக்குனர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களையும் துணை டைரக்டர் மைன்ஸ் டிபார்ட்மென்ட் அவர்களையும் நேரடியாக சென்று சந்தித்து மனுவாக கொடுக்க இருக்கின்றோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் ரெட் மனுவாக தாக்கல் செய்து இந்த விவகாரத்தில் சரியான உத்தரவு கிடைக்க சட்டப் போராட்டம் நடத்த இருக்கின்றோம். மேலும் நமக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அறப்போராட்டம் நடத்தவும் யோசனை செய்யப்பட்டுள்ளது. ஆகையால் கோவை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து டிப்பர் உரிமையாளர்களும் இது சம்பந்தமான அறிவிப்பு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் கிடைத்தவுடன் நமது ஆலோசனைகளையும் நமது ஒத்துழைப்பையும் கொடுத்து நமது தொழிலை காப்பதற்கு முழு உறுதியுடன் ஒத்துழைப்புத் தருமாறு தர கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் தயாராக உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...