கோவை மாநாடு பற்றி தாராபுரத்தில் ஓபிஎஸ் அணி அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆலோசனை

தாராபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஓபிஎஸ் அணி கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


திருப்பூர்: ஜனவரி 6ஆம் தேதி ஓபிஎஸ் பன்னீர்செல்வம் தலைமையில் கோவையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கொள்வது குறித்து செயல் வீரர்கள் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் கழக செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜர் தலைமையில், ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் அழகுராஜ், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் ஜனவரி 6ஆம் தேதி ஓபிஎஸ் பன்னீர்செல்வம் தலைமையில் கோவையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கொள்வது குறித்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடம் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் ஆலோசனை வழங்கினார்.



இந்த கூட்டத்திற்கு தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி செயல்வீரர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் ஜவகர் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...