கோவை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோவை மாநகர் துடியலூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீதுவபோக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கோவை மாநகர் துடியலூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளாராக (SSI) பணியாற்றி வருபவர் துரைராஜ்(55). இவர் ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு 19 மற்றும் 17 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் படிப்பை பாதியில் நிறுத்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் பலமுறை அந்த பெண் வீட்டில் இல்லாத போது துரைராஜ் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இந்நிலையில் நான்கு தினங்களுக்கு முன் அச்சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதனால் அப்பெண் சிறுமிகளை காணவில்லை என புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போலிசார் அச்சிறுமிகள் இருந்த இடத்தை கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் துரைராஜ் செய்த பாலியல் துன்புறுத்தல்களை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து துரைராஜ் மீது போக்சோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்கு செய்து துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...