கோவை கார் குண்டு வெடிப்பு முதலாமாண்டு நாள் - கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த ஆண்டு இதே நாளில் கார் குண்டுவெடிப்பு நடந்த தினத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.


கோவை: கார் குண்டுவெடிப்பு நடந்த கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் ஆயுதபூஜை கொண்டாட்டம்

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரர் கோவில் முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த ஜமிஷா முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் சிலிண்டர் வெடி விபத்து என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் அது கார் வெடிகுண்டு தாக்குதல் என போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு முதலாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுத பூஜையும் கொண்டாடப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...