உக்கடம் கார் குண்டு வெடித்த கோயிலில் வானதி சீனிவாசன் வழிபாடு

கோவை மாவட்டம் உக்கடம் அருகே கடந்த ஆண்டு இதே நாளில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு நடந்த கோவிலில் பாஜகவின் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வழிபாடு செய்தார்.


கோவை: உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த ஆண்டு இதே நாளில் கார் குண்டுவெடிப்பு நடந்த தினத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரர் கோவில் முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த ஜமிஷா முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் சிலிண்டர் வெடி விபத்து என்று கூறப்பட்ட நிலையில் பின்னர் அது கார் வெடிகுண்டு தாக்குதல் என போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு முதலாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் கார் குண்டு வெடிப்பு நடந்து ஓராண்டு ஆன நிலையில், அக்கோவிலில் வானதி சீனிவாசன், கனகசபாபதி உள்ளிட்ட பாஜகவினர் வழிபாடு நடத்தினர்.

இன்றுஆயுத பூஜையும் கொண்டாடப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...