பல்லடம் அருகே குடிநீர் வசதிகேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் முறையான சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: நான்கு நாட்களில் ஆழ்துளை கிணறு அமைத்து தருவதாக ஊராட்சி தலைவர் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 11 வது ஓம் சக்தி நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.



இப்பகுதியில் முறையான சாலை வசதி அமைத்து தர கோரியும் குடிநீர் பிரச்சனை அதிக அளவில் உள்ளதால் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று திடீரென 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருப்பூர் திருச்சி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு அங்கு வந்த ஊராட்சி தலைவர் இன்னும் நான்கு நாட்களில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை சரி செய்வதாக உறுதியளித்ததன் பிறகு அங்கிருந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...