உடுமலை அருகே தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோயிலுக்கு சென்ற ஓருவர் தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: நாள் தோறும் கோவிலுக்கு செல்பவரை கொட்டிய தேனீக்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் கடத்தூர் குருவன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் சோலைமுத்து(37).



இவர் கடத்தூரில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் கோவிலுக்கு காலை மாலை செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். வழக்கம் போல் நேற்று மாலை 5.30 மணியளவில், கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கோவில் அருகில் உள்ள மரத்திலிருந்த தேனீக்கள் கூட்டம் கலைந்து, சோலைமுத்துவை கொட்டியுள்ளது. இதில் பதட்டதுடன் கோவிலுக்குள் ஓடிய லைமுத்துவை, அங்கிருந்தவர்கள் மீட்டு, மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.



அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சோலைமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கணியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

உடுமலை அருகே கோவிலுக்கு சென்ற வாலிபர் தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்த சம்பவம் இப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...