உடுமலை கருப்பண்ணசாமி கன்னிமார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு நாள் - சிறப்பு அபிஷேகம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கருப்பண்ணசாமி கன்னிமார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு கணபதி ஹோமம், 100 சங்கு பூஜை நடைபெற்றது.


திருப்பூர்: மண்டல பூஜை நிறைவு நாள் பூஜைக்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் ஊராட்சி செங்குளம் மதகடி கருப்பண்ணசாமி கன்னிமார் கோவிலில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு இன்று கருப்பண்ணசாமி கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

மேலும் வேத மந்திரங்கள் முழங்க 108 சங்கு பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது.



பள்ளபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் மண்டல பூஜை நிறைவு நாள் பூஜைக்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருப்பண்ணசாமி கன்னிமார் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...