சௌடேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி விழா - கத்தி போட்டு அம்மனை அழைத்த பக்தர்கள்

கோவை வெள்ளக்கிணர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் நவராத்திரி கொலு விழாவில் பக்தர்கள் மார்பு மற்றும் கைகளில் இரத்தம் சொட்ட கத்தி போட்டு பரவசத்துடன் அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.


கோவை: சிம்ம வாகனத்தில் திருவீதி உழா வந்த அம்மன் ஒவ்வொரு வீடாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிப்பட்டனர்.

கோவை வெள்ளக்கிணரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி கொலு விழா நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய விழாவில் சிறப்பு பூஜை, அலங்கார பூஜை நடைபெற்று பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர்.



தொடர்ந்து தச்சந்தோட்டம் பகுதியில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.



முன்னதாக அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் ஏற்றி அதன் முன்பு பக்தர்கள் கத்தி போடும் நிகழ்வு நடைபெற்றது.

அம்மன் சப்பரம் ஊர்வலம் ஆக புறப்பட்டு கோயில் வரும் முன்பு ஆலங்கொம்பு அழகு வீரக்குமாரர்களின் கத்தி போடும் பரவசமான நிகழ்ச்சியில் இளைஞர்கள் கைகளில் கூர்மையான கத்தியைக் கொண்டு மார்பு மற்றும் இரண்டு கைகளில் வெட்டி இரத்தம் சொட்டச் சொட்ட அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.



சிம்ம வாகனத்தில் திருவீதி உழா வந்த அம்மன் ஒவ்வொரு வீடாக சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து வன்னிமரம் குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

தொடர்ந்து கலர் தோட்டத்தில் இருந்து சாமுண்டி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீ வெள்ளை தாமரை வீர குமாரர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜை நடைபெற்று தீர்த்தம், பிரசாதம் தீபாராதனை அன்னதானம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...