கோவையில் நடைபெற்று வரும் தூய்மைபணிகள் - மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு, மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகளை மேயர்‌ கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன்‌ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


கோவை: கோவையில் நடைபெற்று வரும் தூய்மைபணிகளை ஆய்வு செய்த மேயரும், மாநகராட்சி ஆணையாளரும் சாலைகள்‌ மற்றும்‌ தெருக்களில்‌ தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, தூய்மையாக பராமரித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.



கோவை‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வாடு எண்‌.20க்குட்பட்ட மண்டல சுகாதார அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, மாநகராட்சி தூய்மைப்பணியாளார்கள்‌ முழுமையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தூய்மைப்பணிகளில்‌ ஈடுபடவேண்டுமெனவும்‌, பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்காத குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமெனவும்‌ தூய்மைப்பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.20க்குட்பட்ட மண்டல சுகாதார அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ள தேவையற்ற பொருட்கள்‌ மற்றும்‌ பயன்பாட்டில்‌ இல்லாத இரும்பு பொருட்களை உடனடியாக அகற்றி அலுவலகத்தினை தூய்மையாக பராமரித்திட வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



பின்னர், வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.30க்குட்பட்ட கணபதி, சங்கனூர் சாலையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள பொது கழிப்பிடத்தில்‌ அடிப்படை வசதிகள்‌ மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலாரகளுக்கு உத்தரவிட்ட பின்பு,



வார்டு எண்‌.26-க்குட்பட்ட பிளமேடு, பயண்‌ மில்ஸ்‌ பகுதியில்‌ உள்ள நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌, நேரில்‌ சென்று அங்குள்ள பணியாளர்களின்‌ வருகை பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



அதனைத்‌ தொடாந்து, கோவை‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.26-க்குட்பட்ட பீளமேடு, குப்பை மாற்று நிலையத்தின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ சேகரமாகும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வெள்ளலூர்‌ குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு தினசரி வாகனங்களில்‌ கொண்டு செல்லப்படும்‌ குப்பைகளின்‌ எடை போன்றவற்றை கனிணியில்‌ பதிவுகள்‌ மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு, குப்பை மாற்று நிலையத்தில்‌ மேலும்‌ ஒரு குப்பை வாங்கும்‌ இயந்திரத்தினை வாங்கிட சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்‌.



பின்னர்‌, வாடு எண்‌.26-க்குட்பட்ட பீளமேடு, பயண்‌ மில்ஸ்‌ பகுதியில்‌ 24 மணி நேர குடிநீர் திட்டபணிகளில்‌ குழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌ நிறைவடைந்த பகுதியினை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில்‌ தார்‌ சாலை பணிகளை உடனடியாக தொடங்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



முன்னதாக, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட ராஜீவ்‌ காந்தி சாலை, பாலமுருகன்‌ நகா்‌, எம்‌.கே.பி.காலனி ஆகிய பகுதிகளில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு அப்பகுதிகளில்‌ தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்‌.



பின்னர்‌, மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.67க்குட்பட்ட ராம்நகர்‌, கிராஸ்கட்‌ ரோடு ஆகிய பகுதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு அப்பகுதிகளில்‌ தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



இந்த ஆய்வுகளின்போது, மாமன்ற உறுப்பினர்கள்‌ மரியராஜ்‌, வித்யா, வடக்கு மண்டல உதவி ஆணையர்‌ (பொ) நூர்‌அகமது, மத்திய மண்டல உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, உதவி பொறியாளர்கள்‌ நாசா, குமரேசன்‌, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ இராதாகிருஷ்ணன்‌, குணசேகரன்‌, சுகாதார ஆய்வாளர்‌ அரவிந்த்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...