சேலத்தில் இருந்து கோவை புறப்பட்ட அரசு பேருந்தில் தீ விபத்து - பயணிகள் அலறல்

சேலத்தில் இருந்து கோவை வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புகைமூட்டத்தால் பயணிகள் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


கோவை:சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த அரசு பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது.

சேலத்தில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த போது கருமத்தம்பட்டி அருகே திடீரென பேருந்தில் முன்பக்கத்தில் புகை கிளம்பிய நிலையில் ஓட்டுநர் சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தி விட்டு பயணிகளையும் இறங்க சொல்லி விட்டு அவரும் நடத்துனரும் இறங்கி உள்ளனர். பின்னர் திடீரென பேருந்தில் தீப்பிடித்தது கொழுந்து விட்டு எரிய துவங்கி உள்ளது.

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து சூலூரில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...