உடுமலை அருகே தளி பாளையக்காரர் தளபதி வீரண்ணன் கற்சிலை கண்டிபிடிப்பு

உடுமலை வட்டம், திருமூர்த்தி நகரிலிருந்து ஏராம் வயலுக்கு செல்லும் வழியில் வழிபாட்டில் உள்ளது பழைய கற்சிலை. இதனை வீரண்ணன் கோயில் என்றும், வீரண்ண சாமி என்று அனைத்து சமூக மக்களும் வழிபடுகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே கிடைத்த தளி பாளையத்துகாரருக்கு படைத்தளபதியாக இருந்த வீரண்ணன் கற்சிலையை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

உடுமலை வட்டம், திருமூர்த்தி நகரிலிருந்து ஏராம் வயலுக்கு செல்லும் வழியில் வழிபாட்டில் உள்ளது பழைய கற்சிலை. இதனை வீரண்ணன் கோயில் என்றும், வீரண்ண சாமி என்று அனைத்து சமூக மக்களும் வழிபடுகின்றனர்.

இது தனியரது தென்னந்தோப்பிற்குள் சிதிலமடைந்த பழைய கட்டிடங்களுக்கு இடையில் வழிபாட்டில் உள்ளது. இந்தக் கற்சிலையில் நாய் உருவத்துடன் ஒரு வேட்டைக்குப் போகும் தோற்றத்துடன் ஒரு கையில் குச்சியுடனும், இன்னொரு கையில் குறுவாளுடன் இருக்கும் வகையில் கற்சிலை உள்ளது. இது வேட்டைச்சமூகத்தையும், ஆடி மாதத்தில் வேட்டைக்குச் சென்ற நிகழ்வுகளையும் பதிவு செய்வதாக இந்தக் கற்சிலை அமைந்துள்ளது.

இது தளி பாளையக்காரருக்கு தளபதியாக இருந்த வீரண்ணன் என்பவரின் சிலையாகும். ஏனெனில் தளி எத்தலப்பருக்கு படைத்தளபதியாகவும், பாதுகாப்பு அரணில் முதன்மையானவராகவும் இருந்தவர் வீரண்ணன் என்ற பெயர் கொண்டவர். நமது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் சென்னை ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களில் இவ்வாறான பெயர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது நாள் வரைக்கும் தளி பாளையக்காரர் குறித்த வரலாற்றுத் தேடலில் வீரண்ணன் என்ற பெயர் குறித்தான தனியான சிலைகளோ, தனி நபரில் இந்தப் பெயரில் வழிபாடுகள் இருப்பதாகவோ இதுவரைக்கும் கிடைக்கவில்லை.



தளி கோட்டை இருந்த பகுதியாகக் கூறப்படும் கோட்டை மாரியம்மன் கோயிலிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கும் வடக்கில் ஏராம் வயலுக்கும் கிழக்கில் திருமூர்த்தி நகரிலிருந்து மேற்கில் ஒரு தனியர் தோட்டத்திற்கும் இந்த வீரண்ணன் கற்சிலை இருக்கிறது.

இந்தத் தோட்டத்தின் உரிமையாளரது பத்திரத்திலும், வீரண்ணன் கோயில் இருப்பதையும் அதைப் பாதுகாக்க வேண்டும் எனவும் வருவாய் ஆவணங்களில் உள்ளதையும் அறிய முடிகிறது.



தளி பாளையத்துகாரருக்கு படைத்தளபதியாக இருந்தவர் வீரண்ணன் என்றும் அவருக்கான சுவடுகள் இல்லாதிருந்ததும் இப்போது நிறைவு பெற்றுள்ளது. தளி பாளையப்பட்டு வரலாற்றுக்கு ஒரு சான்றாகக் கிடைத்துள்ளது. இதில் இருக்கும் கல்வெட்டுகள் முழுமையாக படிக்க இயலாமலும், சிதிலமடைந்தும் இருப்பதால் முழுமையான தரவுகள் பெற இயலவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த இருபது ஆண்டுகளாகத் தொடர் ஆய்வில் இருக்கும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்கள் முனைவர் மதியழகன், முனைவர் முனியப்பன், வரலாற்று ஆசிரியர்கள் ராபின் மற்றும் பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோரும் இந்தக் களப்பணிகளில் ஈடுபட்டு ஆவணப்படுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...