கோவையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கோவையில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோவையில் போராட்டம் நடைபெற்றது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே கலந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் காசா உட்பட பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கோவையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் சார்பில் நேற்று உக்கடம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்பொழுது இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது எனவும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தனது செயல்பாடுகளை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஜமாத்துல் உலமா சபையின் மாநில துணைத்தலைவர் மெளலவி இலியாஸ் ரியாஜி பேசுகையில்

உலகிலேயே ஒரு நாடு பயங்கரவாத நாடாக இருக்குமென்றால் முதலாவது இஸ்ரேல். இரண்டாவது நாடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நாடு. நான் இந்தியா என்று சொல்ல மாட்டேன். ஏனேன்றால் இந்தியா சமதானத்தின் பக்கம் நின்றிருக்கிறது. பாரதப்பிரதமர்கள் நேரு முதல் மன்மோகன் சிங் வரை எவரும் இஸ்ரேல் நாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் செய்ததில்லை. மோடி மட்டும் அதிகாரப்பூர்வமாக பயணம் செய்தார்.

அதற்கு இஸ்ரேல் பிரதமர் இந்தியா நாட்டு பிரதமர் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு எழுபது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது என்று சொல்லியுள்ளார். இஸ்ரேலின் எழுபது ஆண்டுகளாக ஏக்கத்தை பூர்த்தி செய்து கொடுத்தவர் மோடி. இஸ்ரேல் அங்குள்ள சாந்த் மண் என்கிற மலருக்கு மோடியின் பெயரை வைத்துள்ளார்கள். இஸ்ரேல் காரர்களுக்கு கொஞ்சம் மூளை இருக்கிறது. காரணம், யார்தான் பாராட்ட மாட்டார்கள். சாந்த மண்ணுக்கு மோடியின் பெயரை வைத்தால் எனப்பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...