நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தின் மாணவர் அணி மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம்


நீட் தேர்வுக்கு எதிரான மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் கோவை சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் இருந்து திராவிடர் கழகத்தின் மாணவர் அணியின் மாநில துணை செயலாளர் காமராஜ் தலைமையில் புறப்பட்டது. 

சமீபத்தில் மத்திய அரசு மருத்துவ கல்வியில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்கு தமிழகத்தில் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் இளைஞர் அமைப்புகளின் சார்பில் மாநில அளவில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக பிரச்சார இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டு இன்று சென்னை, தர்மபுரி, கோவை, தென்காசி, கடலூர் ஆகிய ஐந்து மையங்களில் இருந்து புறப்பட்டு வரும் 21ம் தேதி மாலை விருத்தாசலத்தில் சங்கமித்து பொதுக்கூட்டம் நடத்தப்படவும் உள்ளது. இதில் கோவையில் இருந்து புறப்பட்ட இந்த பிரச்சார பயணத்தில் ஏராளமாணவர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...