பாலம் பணியை விரைந்து முடிக்க நகராட்சிக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள, பாலம் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் மந்தமாக நடைபெறும் பணிகளை முடுக்கிவிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சி ஆர்.ஆர், தியேட்டர் ரோடு, குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு, செக்கு வீதியில் சாக்கடை கால்வாய் தோண்டப்பட்டு, பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் இருந்தது.

அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல், வேறு வழியாக சுற்றிச் செல்லும் நிலை காணப்பட்டது.மேலும், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கடும் துர்நாற்றம் வீசியதால், கால்வாய் அருகே கடை வைத்து இருப்போர் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த, 10 நாட்களுக்கு முன், செக்கு வீதியில் பாலம் கட்டுவதற்காக ரோடு தோண்டப்பட்டது. இவ்வழியாக வாகனங்கள் செல்லாமல் இருக்க, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் மந்தமாக நடப்பதால், இவ்வழியாக செல்ல வேண்டிய வாகன ஓட்டுநர்கள், பல்லடம் ரோடு வழியாக சுற்றிச் செல்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்தி முடித்து, போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...