நீதிமன்ற உத்தரவின் படி சொத்துக்களை மீட்ட தமிழ்நாடு வக்பு வாரியம்

திருப்பூரில் 3 பள்ளிவாசல் உட்பட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழ்நாடு வக்பு வாரியம் கையகப்படுத்தியது.


 திருப்பூர்: நீதிமன்ற உத்தரவுப்படி 3 பள்ளிவாசல் மறும் 140 கடைகள் கையகப்படுத்தப்பட்டது.

திருப்பூர் காதர் பேட்டையில் உள்ள அஹ்லே சுன்னத் ஜமாத் பள்ளிவாசலுக்கு உட்பட்ட மேலும் இரண்டு பள்ளிவாசல் மற்றும் 140 கடைகள் உள்ளிட்டவற்றை கடந்த முப்பது ஆண்டுகளாக நிர்வகித்து வந்த சலீம் (எ) அப்துல் ரகுமான் என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக காதர்பேட்டை பூர்வீக ஜமாத்தார், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 2013ம் ஆண்டு புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து வக்பு வாரியம் சலீமை நிர்வாக பொறுப்பில் இருந்து அகற்றியது. இதனை எதிர்த்து சலீம் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 2015ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்தால் 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி அன்று உச்சநீதிமன்றம் நிர்வாக பொறுப்பில் உள்ள சலீமை அகற்றி வக்பு வாரியம் பள்ளிவாசல் மற்றும் அதற்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்தி நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை உறுதி செய்தது.



அதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் வக்பு வாரிய அதிகாரிகள் இன்று சலீமிடமிருந்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 பள்ளிவாசல் மற்றும் 140 கடைகள் உட்பட அசையா சொத்துக்களை கையகப்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...